அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருக்கு ஏற்பட்ட துயரம்: கொடூரமான சிறைக்கு மாற்றம்


நோபல் பரிசை வென்ற பெலாரஸ் நாட்டின் Ales Bialiatski என்பவர் கொடூரமான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நோபல் பரிசை வென்ற Ales Bialiatski

பெலாரஸ் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துகளை கூறியதாக குறிப்பிட்டு, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற Ales Bialiatski-க்கு அங்குள்ள நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், அவர் தற்போது N9 colony என அறியப்படும் கொடூரமான சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருக்கு ஏற்பட்ட துயரம்: கொடூரமான சிறைக்கு மாற்றம் | Peace Prize Winner Transferred To Brutal Prison @getty

கடந்த மார்ச் மாதம் 60 வயதான Ales Bialiatski குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
நாட்டின் முதன்மையான மனித உரிமைகள் ஆர்வலரும், 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசையும் வென்றுள்ள Ales Bialiatski மீது பொது ஒழுங்கை மீறும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

2021ல் கைது செய்யப்பட்ட Ales Bialiatski சிறையில் 20 மாதங்கள் செலவிட்டுள்ளார்.
2020ல் நாட்டின் ஜனாதிபதிக்கு உச்ச அதிகாரம் அளிப்பது தொடராக வெடித்த நாடு தழுவிய போராட்டங்களில் கலந்து கொண்டதாக கூறி Ales Bialiatski மற்றும் அவரது சக ஊழியர்கள் மூவர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

35,000 க்கும் மேற்பட்டோர் கைது

ரஷ்ய ஜனாதிபதியின் ஆதரவாளரும், உக்ரைன் போருக்கு ஒத்துழைப்பு அளித்து வருபவருமான ஜனாதிபதி Alexander Lukashenko கடந்த 1994 முதல் பெலாரஸ் நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.

2020ல், பெலாரஸில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டத்தின் போது, ​​35,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.

மேலும், பெலாரஸ் நாட்டில் அரசியல் கைதிகள் எண்ணிகை மட்டும் 1,516 என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட Viktar Babaryka என்பவர் கைது செய்யப்பட்டு, தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28 நாட்களாக இவர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. 14 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், கடந்த 100 நாட்களாக என்ன ஆனார் என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.