குஜராத்தைச் சேர்ந்த பால் பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் தற்போது தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் பகுதிகளில் அதற்கு போட்டியாக அமுல் நிறுவனம் இறங்கியுள்ள நிலையில் இதனை தமிழக அரசு கண்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டு நிலையம் ஒன்றை நிறுவியுள்ள அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, […]