அவுஸ்திரேலியாவில் உள்ள மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் சில இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தடை செய்துள்ளன.
இந்திய மாணவர்களுக்கு தடை விதித்த அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்
அவுஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் (NSW) ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும், விசா மோசடி செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகரிதது வருவதன் காரணமாக, சில இந்திய மாநிலங்களிலிருந்து மாறும் மாணவர்களைச் சேர்க்க தடை அறிவித்துள்ளன.
இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து மாணவர்களை இனி சேர்க்க வேண்டாம் என்று கடந்த வாரம் கல்வி முகவர்களுக்கு கடிதம் எழுதியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தின் கடிதம்
அந்த கடிதத்தில், அவுஸ்திரேலிய உள்துறை விவகாரங்கள் துறையால் சில இந்தியப் பகுதிகளிலிருந்து விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பல்கலைக்கழகம் அவதானித்துள்ளதாக, இரு பல்கலைக்கழகங்களும் தெரிவித்துள்ளன.
இது ஒரு குறுகிய கால பிரச்சினையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இது ஒரு ட்ரெண்டாக உருவாகி வருவது இப்போது தெளிவாகிறது என்று பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.
பஞ்சாப், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் அதிக அபாயத்தை அளிக்கும் பகுதிகள் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும்
இந்த விஷயத்தின் அவசரம் காரணமாக, இந்தியாவில் இந்த பிராந்தியங்களிலிருந்து மாணவ சேர்க்கையை உடனடியாக நிறுத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து ஆட்சேர்ப்பு வழக்கம் போல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மற்றும் ஜூன் 2023 ஆகிய இரண்டு மாதங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும் என்று மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.