இன்றைய பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற அமர்வு இன்று (25) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. டபிள்யூ.பி.டி. தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 12.30 முதல் பி.ப. 5.00 மணி வரை,
(i) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை,
(ii) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,
(iii) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை,
(iv) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை மற்றும்
(v) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமான 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.