போபால்: என் பொண்டாட்டியை ஒரு நாள் கோபத்தில் திட்டிவிட்டேன்.. என்னை எப்படி திட்டலாம் என்று கோபத்தில் என்னுடைய பிறப்புறுப்பை கடித்துவிட்டார் என்று கணவர் ஒருவர் கதறியபடி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரை கேட்டு ஆடிப்போன போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கணவன் மனைவி தகராறு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கணவனை பிடிக்காமல் மனைவி அடிப்பதும், மனைவியை பிடிக்காமல் கணவன் அடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
கோபத்தில் மனைவியை கணவன் காலி செய்யும் சம்பவமும், கணவனை மனைவி காலி செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இப்ப நம்ம விஷயத்திற்கு வருவோம்.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவை சேர்ந்த ஒருவர், தன் மனைவியால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி போலீஸ் அதிகாரிகளை சந்தித்து புகா மனு அளித்துள்ளார். இதனை பொறுமையாக கேட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு உறுதி அளித்திருக்கிறார். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் கொடுத்த புகார் தான் பேசுபொருளாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொர்ரேனாவின் ஜவுரா தாலுகாவிற்கு உட்பட்ட உம்மத்கர் பன்சி என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராஜ் குஷ்வாஹா. இவர் தனது மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரெண்டு சைலேந்திர சிங் சவுகானிடம் மனைவியை குற்றம்சாட்டி புகார் மனுவை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் ரகுராஜ் என்ன கூறியிருக்கிறார் என்பதை பார்ப்போம்: எனக்கு லட்சுமி என்ற ராஜகுமாரிக்கும் சில வருடங்ளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. என்னுடன் கல்யாணம் ஆனதில் இருந்தே என் மனைவியின் நடத்தை சரியில்லை. தினமும் வீட்டிற்கு யாரென்றே தெரியாதவர்கள் வந்து செல்வார்கள். அவர்களை அழைத்து வந்து பேசிக்கொண்டிருப்பார்.
முதலில் அவருடைய உறவினர்களாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். தினமும் வீட்டுக்குள் அந்நியர்கள் வந்து செல்ல ஆரம்பிச்சதும் எனக்கே என் மனைவி மீது சந்தேகம் வந்தது. தெரியாதவர்கள் இப்படி வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்லை என்று என் மனைவியை கண்டித்தேன்.
ஆனால் என் மனைவி லட்சுமி எதையுமே காதுகொடுத்து கேட்கவில்லை. ஆனால் அவர் பதிலுக்கு பலிவாங்கிவிட்டார். என்னையும்என் குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார்.
எனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது எனது மனைவி மானபங்கம் செய்தாக பொய்யான வழக்கை போட்டுவிட்டார். இப்படி தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், நான் ஒருநாள் மனைவியை கடுமையாக திட்டிவிட்டேன். அப்போது அவள் கோபமடைந்து என்னுடைய பிறப்புறுப்பினை கடித்து விட்டார்.
கதறியபடி வந்த என்னை உறவினர்கள் சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து குவாலியருக்கு அனுப்பப்பட்டேன் குவாலியரில், மருத்துவர்கள் அவரது பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்தனர். எனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்” இவ்வாறாக அந்த கணவர் புகார் மனுவை கொடுத்துள்ளார். இந்த புகார் மீது தான் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.