கொலையில் முடிந்த லிவ் இன் தொடர்பு..!

ஐதராபாத்தில் இருப்பவர் சந்திர மோகன் (வயது 48). இவர் அனுராதா ரெட்டி (வயது 55) என்பவருடன் லிவ்-இன் முறையில் தொடர்பில் இருந்து வந்து உள்ளார்.

அவரை தனது வீட்டின் ஒரு பகுதியில் தரை தளத்திலேயே தங்க வைத்து உள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பெற்று உள்ளார்.அதனை திருப்பி தர கோரி, அவரும் சந்திரமோகனிடம் தொடர்ந்து கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளார். இதனால், அவரை தீர்த்து கட்ட மோகன் திட்டமிட்டு உள்ளார்.

இதன்படி, கடந்த 12-ந்தேதி மதியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளில் குத்தி அவரை கொலை செய்துள்ளார்.

இதன்பின்னர், உடலின் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து உள்ளார்.பினாயில், டெட்டால், வாசனை பத்தி, கற்பூரம் மற்றும் வாசனை திரவியம் ஆகியவற்றை வாங்கி உடலில் தெளித்து வந்து உள்ளார். அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்து தெரிந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்து, சந்தேகம் எழாமல் பார்த்து கொண்டார்.

இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.