ஜப்பான் ,
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனுடன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார். இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.
சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்தார்
இந்த நிலையில் தனது இரண்டு நாள் , சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஜப்பான் சென்றடைந்துள்ளார்.ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்தில் முதல் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசாகாவிற்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.