ஜெயிலர் படத்திற்காக முதல் சம்பவம் செய்த ரஜினி… அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ் அப்டேட்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன.

ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினியின் ஜெயிலர் வெளியாகவுள்ள நிலையில், விரைவில் லால் சலாம் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த ரஜினி, தற்போது சென்னையில் பிஸியாக காணப்படுகிறார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டதால் அவர் அடுத்த வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

ஜெயிலர் படத்தில் ரஜினியின் முதல் சம்பவம்:சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் பிஸியாக உள்ளார். மும்பையில் நடைபெற்று வந்த லால் சலாம் ஷூட்டிங்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடன் ரஜினி நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஏற்கனவே ரஜினியின் மொய்தீன் பாய் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தது.

இதனிடையே ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.

முதலில் முத்துவேல் பாண்டியன் என்ற ரஜினியின் கேரக்டர் டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது. சால்ட் அன்ட் பெப்பரில் செம்ம மாஸ் காட்டியிருந்தார் ரஜினி. ஜெயிலர் ரிலீஸ் தேதி டீசரிலும் அதே கெட்டப்பில் வந்து மாஸ் காட்டியிருந்தார். இந்தப் படம் பக்கா கமர்சியல் பேக்கேஜாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லால் சலாம் படப்பிடிப்பில் இருந்த ரஜினி, ஜெயிலருக்காக அவசரமாக சென்னை திரும்பியுள்ளாராம்.

 Jailer: Rajini started his dubbing work for Jailer film

ஜெயிலர் படத்தில் ரஜினியின் போர்ஷனுக்கான எடிட்டிங் முடிந்துவிட்டதால், டப்பிங் பணிகளை தொடங்கிவிட்டாராம். இதற்காக தான் லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து ரஜினி சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், இன்னும் சில தினங்களுக்குள் ஜெயிலர் படத்தில் தனது டப்பிங் வேலைகளை முடித்துவிட ரஜினி திட்டமிட்டுள்ளாராம். அதன் பின்னர் மற்ற நடிகர்கள் டப்பிங் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் வேகம் காட்டி வரும் நெல்சன், டப்பிங் முடிந்துவிட்டால் பைனல் கட் போய்விடலாம் என காத்திருக்கிறாராம். அதேநேரம் ஜெயிலர், லால் சலாம் என இரண்டு படங்களிலும் ரஜினியின் வேலை முடிந்துவிட்டால் தலைவர் 170 படப்பிடிப்பை தொடங்க தசெ ஞானவேல் ரெடியாகவுள்ளாராம். இதனால், அடுத்தடுத்து ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.