துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு


துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய சிறுவன் நெதர்லாந்தில் பொலிசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றித்திரிந்த 5 வயது சிறுவன்

கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக பல எண்ணிக்கையிலான குடியிருப்புகள் தரைமட்டமானது.

துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு | Mystery As Turkish Earthquake Boy @getty

இந்த நிலையில் நெதர்லாந்தின் Maastricht நகர தெரு ஒன்றில் சுற்றித்திரிந்த 5 வயது சிறுவனை மீட்ட பொலிசார், உள்ளூர் மொழி தெரியாத, துருக்கிய மொழி மட்டும் பேசும் சிறுவனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், தாம் துருக்கியில் இருந்து வந்துள்ளதாகவும், துருக்கியில் தமது பெற்றோர்கள் இருப்பதாகவும், நிலநடுக்கத்தில் சிக்கி அவர்கள் காயமடைந்துள்ளதையும் சிறுவன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

தற்போது குறித்த சிறுவன் காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 5 வயதேயான சிறுவன் எவ்வாறு சுமார் 1500 மைல்கள் கடந்து நெதர்லாந்தில் வந்து சேர்ந்தான் என்பது மர்மமாகவே உள்ளது என்கிறார்கள்.

இதனிடையே, நெதர்லாந்தில் அமைந்துள்ள துருக்கி தூதரகம் இந்த விவகாரம் தொடர்பில் நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சகத்திடம் இருந்து மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியில் மட்டும் 50,000 மக்கள்

அத்துடன், சிறுவனை மீட்டதும் துருக்கி தூதரகத்தில் தகவல் தெரிவிக்காமல் தாமதப்படுத்தியுள்ளதையும் புகாராக குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் சிறார்களை கடத்தும் குழுக்கள் தீவிரமாக களமிறங்கியிருந்தது என அதிகாரிகள் தரப்பில் அப்போதே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

துருக்கி நிலநடுக்கத்தில் தப்பிய சிறுவன் 1500 மைல்களுக்கு அப்பால் இன்னொரு நாட்டில் கண்டுபிடிப்பு | Mystery As Turkish Earthquake Boy @getty

பிப்ரவரி 6ம் திகதி துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் துருக்கியில் மட்டும் 50,000 மக்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 100,000 மக்கள் காயங்களுடன் தப்பினர்.

மட்டுமின்றி, துருக்கி மக்கள் தொகையில் 16 சதவீதம் என குறிப்பிடும் அளவுக்கு சுமார் 14 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.