பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்த ஆடைகள்!

சிங்கப்பூர் பயணத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்த ஆடைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கமாக அரைக்கை சட்டை மற்றும் வேட்டி அணியும் முதலமைச்சர், சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும்போது முழுக்கை சட்டை, பேண்ட் மற்றும் கருப்புக் கண்ணாடி அணிந்து பயணம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கோட், சூட், டை அணிந்து தொழில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தார்.

தமிழ் அமைப்புகள் கொடுத்த வரவேற்பில் பட்டு கரை வேட்டி, தோளில் துண்டு, அரக்கு நிற கலர் சட்டை அணிந்து பங்கேற்ற முதலமைச்சர், சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடனான சந்திப்பில், கபாலி ரஜினி பாணியில் கட்டம் போட்ட கோட் சூட் அணிந்து மிடுக்காக பங்கேற்றார்.

லிட்டில் இந்தியா பகுதியில் தமிழர்களை சந்தித்தபோது, முதலமைச்சர் கேஷுவலாக முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.