பிரம்மாண்டமாக தயாராகியுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக
,
, விசிக உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்.
4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அமர முடியும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர உணவகம், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28ஆம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்துவைக்கிறார். இந்தத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் அறிவித்து வருகின்றன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், மே 28-ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும். மோடி அரசு தொடர்ந்து உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது” என்று கூறினார்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மதிமுக விசிக உள்ளிட்ட 19 கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.