மத்திய ஜப்பானில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த நகர நிர்வாகம் பகீர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நகர நிர்வாகம் திடீரென்று உத்தரவு
ஜப்பானில் உள்ள நகானோ நகரவாசிகள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு நகர நிர்வாகம் திடீரென்று உத்தரவிட்டுள்ளது.
ராணுவ உடையில் மர்ம நபர் ஒருவர் கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையிலேயே நகானோ நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Picture: NHK
தொடர்புடைய தாக்குதல்தாரி பெண் ஒருவரை கத்தியால் குத்தியதையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த அதே தாக்குதல்தாரியால் பொலிசார் இருவர் கொல்லப்பட்டுள்ளதும் ஒருவர் காயங்களுடன் தப்பிய தகவலும் வெளியாக, நகர நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
தாக்குதல்தாரி பொலிசாரிடம் சிக்கவில்லை
இதனிடையே, கொல்லப்பட்ட மூவரும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனரா அல்லது துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்களா என்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அந்த தாக்குதல்தாரி இன்னமும் பொலிசாரிடம் சிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்டிட வளாகம் ஒன்றில் அந்த நபர் பதுங்கியிருப்பதாக மட்டும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே, பொதுமக்கள் எவரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.