முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில், முதன்முறையாக இரவு நேரத்தில் மிக் 29 கே போர் விமானத்தை தரையிறக்கி, மற்றுமொரு வரலாற்று மைல் கல்லை எட்டியுள்ளதாக கடற்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.
இந்த சவாலான இரவு தரையிறங்கும் சோதனையானது, விக்ராந்த் குழுவினர் மற்றும் கடற்படை விமானிகளின் உறுதியையும், திறமையையும், நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்துள்ளது.