நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனக்கு வழங்கப்பட்ட டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தார். இந்த நிலையில் ஜூன் 4 ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருக்கும் ராகுல் காந்தி தனக்கு சாதாரண பாஸ்போர்ட் வழங்க விண்ணப்பித்திருந்தார். இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தை நாடிய சுப்பிரமணியம் சுவாமி புதிய பாஸ்போர்ட் வழங்கக் கூடாது என்றும் அவர் வெளிநாடு சென்றால் தான் தொடர்ந்த […]