இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் கன்வெர்டபிள் ரோட்ஸ்டெர் Z4 மாடலை ₹ 89.30 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி (CBU) இந்தியாவிற்கு செய்யப்படுகிறது. ஜூன் 2023 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கும்.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற போர்ஷே பாக்ஸெடர் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ள இசட்4 காரில் M40i வேரியண்ட் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
2023 BMW Z4
Z4 காரில் இடம்பெற்றுள்ள M40i வேரியண்டில் 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 340 HP பவர் மற்றும் 500 Nm டார்க் வெளிப்படுத்தும். 0 முதல்100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகள் போதுமானதாகும். பிஎம்டபிள்யூ இந்த காரில் மைலேஜ் 12.09kmpl என குறிப்பிட்டுள்ளது.
முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்ட மாற்றங்களை Z4 பெற்று புதிய மெஷ் கிரில், புதிய விளக்குகள் மற்றும் பம்பர் ஆகியவற்றைப் பெறுகிறது. புதிய 19 அங்குல அலாய் வீல்களுடன் வந்துள்ளது.
இன்டிரியரில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் லைவ் காக்பிட் புரொபஷனலுடன் வருகிறது. பிஎம்டபிள்யூ ஆப்பரேட்டிங் சிஸ்டம் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்த்துடன் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.