கோடை காலத்தில் ஏசி இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமானதாக இருக்கும், இந்த கோடைகாலத்தில் ஏசியில் கிடைக்கும் சௌகரியம் உங்களுக்கு குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளில் கிடைக்காது. இந்த கொளுத்தும் வெயிலில் குளிரூட்டப்பட்ட அறையை விட்டு யாரும் வெளியே வர விரும்ப மாட்டார்கள். இந்த வருடம் ஏசி இல்லாமல் வாழவே முடியாது என்று தோன்றும் அளவுக்கு இந்தியா முழுவதும் வெப்பம் கடுமையாகிவிட்டது. இதுவரை வீடுகளில் ஏசி வைக்காதவர்கள் பலரும் இந்த கோடையில் ஏசி-க்களை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். இது ஒருபுறமிருக்க சில வீடுகளில் நீண்ட காலமாக குளிரூட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது, இப்போது ஏசி கூட சரியாக வேலை செய்ய முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து வருவதால் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஏசி-களை கவனித்து பார்க்க வேண்டியது அவசியம். இப்போது ஏசி-களை பராமரிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய டிப்ஸ்களை இங்கு காணலாம்.
1) தூசி மற்றும் குப்பைகளால் அடைக்கப்பட்ட ஃபில்டர்ஸ்கள் ஏசியின் செயல்திறனை பாதிக்கலாம். ஏசி வடிகால் வழியாக வாசனை காற்று சீராக செல்லும் வகையில் ஃபில்டர்ஸ்களை தவறாமல் சுத்தம் செய்யவும் அல்லது புதிதாக மாற்றவும்.
2) ஏசி பொருத்தப்பட்டுள்ள உங்கள் அறை நேரடியாக சூரிய ஒளிப்படும்படி அமைந்து இருந்தால், அறையை குளிர்விக்க ஏசி-க்கு அதிக நேரம் எடுக்கும். அடுத்ததாக நீங்கள் ஏசியை அணைத்த பிறகு அந்த அறை நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்காது. எனவே, ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு கொஞ்சம் கனமான திரைச்சீலைகள் போட்டு அறைக்குள் சூரிய ஒளி நேரடியாக படாமல் இருக்க செய்வதன் மூலம் உங்கள் அறை நன்கு குளிர்ச்சி அடையும். இதனால் அறையில் சூரிய வெப்பம் குறைவது மட்டுமின்றி, ஏசியின் செயல்திறனும் மேம்படும், இது ஒரு பயனுள்ள முறையாகும் மற்றும் இது உங்கள் அறையை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் மாற்ற உதவுகிறது.
3) இப்போதெல்லாம் குளிர், உலர், சூடான, மின்விசிறி போன்ற பல குளிரூட்டும் முறைகள் ஏசியில் கிடைக்கின்றன. சிறந்த குளிரூட்டலைப் பெற, உங்கள் ஏசி கூல் மோடில் அமைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும், இல்லையெனில் அதை கூல் மோடில் அமைக்க வேண்டும். கூல் மோடில் அமைக்கப்படும் போது, ஏசி குளிர்ச்சியடைகிறது மற்றும் காற்றோட்டத்தை குறைக்கிறது, இதனால் அறையின் வெப்பநிலை விரைவாக குறைந்து குளிர்ச்சியடைகிறது.
4) ஏசி மூலம் வரும் சிறந்த குளிர்ச்சியை அடைய, உங்கள் அறைக்குள் குளிர்ந்த காற்று நுழைய அனைத்து கதவுகளும் ஜன்னல்களும் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். நீங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மீண்டும் மீண்டும் திறந்தால், சூடான காற்று உங்கள் அறைக்குள் நுழையும், குளிர்ந்த காற்று வெளியேறும். அவ்வாறு செய்வதன் மூலம் குளிரூட்டும் விளைவு குறைக்கப்படலாம். எனவே, உங்கள் அறையில் குளிர்ச்சியான மற்றும் இனிமையான காற்று இருக்கும் வகையில் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வைக்க வேண்டும்.