Ilayaraja: இளையராஜா ரொம்ப பணிவானவர், அவரை தப்பா புரிஞ்சிருக்காங்க: தியாகராஜன் குமாரராஜா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Isaignani: இளையராஜா மிகவும் பணிவானவர். அந்த பணிவை பலரும் தவறாக புரிந்து கொண்டிருப்பதாக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறியிருக்கிறார்.

​தியாகராஜன் குமாரராஜா​அமேசான் பிரைமில் மே 18ம் தேதி வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தியாகராஜன் குமாரராஜா மேற்பார்வையில் உருவானது. அந்த ஆந்தாலஜியில் தியாகராஜன் குமாரராஜா, பாரதிராஜா, ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், அகஷ்ய சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆகியோரின் படைப்புகள் இருந்தன. அந்த கதைகளுக்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்கள். இந்நிலையில் இளையராஜாவுடன் சேர்ந்து வேலை செய்தது பற்றி பேசியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.பார்த்திபன்​”போன மாசமே கொன்னுட்டாங்க” நடிகர் பார்த்திபன் வேதனை!​​இளையராஜா​இசைஞானி இளையராஜா பற்றி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறியிருப்பாதவது, இளையராஜாவை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் ரொம்ப பணிவானவர். அதை பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜாவுடன் சேர்ந்து வேலை செய்வது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதை அவருடன் சேர்ந்து வேலை பார்த்த அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் என்றார்.

​Karthi:கார்த்தியின் வெற்றிக்கு காரணம் இந்த இரண்டு விஷயம் தான்

​பிடித்துவிட்டது​தியாகராஜன் குமாரராஜா மேலும் கூறியதாவது, உங்களின் ஹீரோக்களை அருகில் சென்று பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் நான் இளையராஜாவை அருகில் சென்று பார்த்தேன். முன்பை விட தற்போது அவரை மிகவும் பிடித்துவிட்டது. தன் நேரத்தை யாரும் வீணடிக்கக் கூடாது என்பது தான் இளையராஜா எதிர்பார்ப்பது. அவரிடம் போய் நம் புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சி செய்யக் கூடாது. ஏனென்றால் அதை அவர் அக்கறைப்பட மாட்டார் என்றார்.
​எளிது​இளையராஜாவுக்கு பிடிக்காத படத்தை அவரிடம் எடுத்துச் சென்றால் இந்த படம் சரியில்லை என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அத்துடன் நிற்காமல் அந்த படத்தை எப்படி காப்பாற்றலாம் என்பதில் ஆர்வம் காட்டுவார். இந்த தெளிவை மட்டும் புரிந்து கொண்டால் இளையராஜாவை புரிந்து கொள்வது மிகவும் எளிது என தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.

​இளமையானவர்​நமக்கு எது தேவை என்று சொன்னால் அதை கொடுப்பார் இளையராஜா. அது நம் கையில் தான் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் இளையராஜாவுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். அவர் என்றும் இளமையானவர். அவர் வேகத்திற்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்கிறார் தியாகராஜன் குமாரராஜா.

​Thalapathy Vijay: 2 முறை மிஷ்கினின் கழுத்தை பிடித்த விஜய்: படத்துக்காக இல்லை

​இசைஞானி​நான் அவரை பற்றி மிகைப்படுத்தி பேசுவது போன்று தெரியலாம். ஆனால் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இருக்கும் முக்கிய நபர்களை குறைத்து குறைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நபராகக் கொண்டு வந்தால் அது இளையராஜாவாகத் தான் இருக்கும். அந்த பட்டியலில் நடிகர்கள், கவிஞர்கள் இருக்கலாம். ஆனால் கடைசி மனிதனாக இளையராஜா தான் இருப்பார் என உறுதியாக கூறுகிறார் தியாகராஜன் குமாரராஜா.
​விளக்கம்​இளையராஜாவிடம் போய் முட்டாள்தனமாக பேசினால் அது அவருக்கு பிடிக்காது. அவரால் முட்டாள்தனத்தை சகிக்க முடியாது. எனக்கு இது தெரியாது என்று சொன்னால் ஏற்பார். ஆனால் தெரியாத விஷயத்தை தெரியும் என்பது போன்று பேசினால் பிரச்சனை வரக்கூடும் என்றார் தியாகராஜன் குமாரராஜா. இசைஞானியுடன் சேர்ந்து வேலை பார்ப்பது கடினம் என விமர்சனம் எழுந்த நிலையில் தியாகராஜன் இப்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.