திருவனந்தபுரம்:எட்டு வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, பலாத்காரம் செய்த காவலாளிக்கு, இறப்பு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூரை சேர்ந்தவர் அனில்குமார், 55. அடுக்கு மாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றினார்.
அங்கு வசித்த எட்டு வயது சிறுமிக்கு அடிக்கடி மிட்டாய் வாங்கி கொடுத்தார்.
கடந்த, 2019ல் ஒரு நாள், மிட்டாய் கொடுத்து பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பரவூர் போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் ‘போக்சோ’ நீதிமன்றம், அனில்குமாருக்கு மரணம் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement