இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
படத்திற்கு படம் வித்தியாசம் கொடுக்க நினைப்பவர் கார்த்தி. அவர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் ஜப்பான். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருக்கிறார்.
“போன மாசமே கொன்னுட்டாங்க” நடிகர் பார்த்திபன் வேதனை!
ஜப்பான் படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்கிறோம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே ஜப்பான் யார் என்று அனைவரும் கேட்கத் துவங்கினார்கள். அந்த கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. கார்த்தியின் பிறந்தநாளான இன்று அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க ஜப்பான் படக்குழு முடிவு செய்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதையடுத்து ஜப்பான் யார் என்கிற அறிமுக வீடியோவை ஜி.வி. பிரகாஷ் குமாரின் மாஸ் பி.ஜி.எம்.முடன் வெளியிட்டுள்ளனர்.
ஜப்பான் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன், சிலருக்கு காமெடியன். ஆக மொத்தத்தில் இந்த மேட் இன் இந்தியா ஜப்பான் ஒரு ஆல் ரவுண்டர் என்பது அந்த அறிமுக வீடியோவில் இருந்து தெரிகிறது.
Ilayaraja: இளையராஜா ரொம்ப பணிவானவர், அவரை தப்பா புரிஞ்சிருக்காங்க: தியாகராஜன் குமாரராஜா
கார்த்தியின் கெரியரில் இந்த ஜப்பான் முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜப்பான் யார் என்கிற வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
வீடியா மாஸாக இருக்கிறது. கார்த்தி மாதிரி நடிக்க யாரு மச்சான் இருக்காங்க. தலைவன் வேற ரகம். பி.ஜி.எம். மரணமாக இருக்கிறது. கேட்டதுமே பிடித்துவிட்டது. சம்பவம் தான் போலயே. கார்த்திக்கு மேலும் ஒரு ஹிட் படம் கிடைத்திருக்கிறது. படத்தை பார்க்க காத்திருக்கிறோம். இந்த தீபாவளிக்கு சரவெடி தான் என தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் அறிமுக வீடியோ மற்றும் தீபாவளி ரிலீஸை அறிவித்து வெளியிடப்பட்ட போஸ்டர் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. அது சாதாரண போஸ்டர் இல்லை தங்க போஸ்டர். தங்க நிற சட்டை, உடம்பெல்லாம் தங்கம், தங்கத் துப்பாக்கி, சுற்றியும் தங்கக் கட்டிகள் என தங்கம் விற்கும் விலைக்கு கார்த்தி அட்டகாசம் செய்திருக்கிறார்.
போஸ்டர் மற்றும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவை எல்லாம் பார்த்தால் படத்தில் ஏதோ பெரிய சம்பவம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. மேலும் படத்தை உடனே பார்க்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.
கார்த்தி மட்டும் அல்ல ராஜுமுருகனும் வேற மாதிரி யோசிக்கிற ஆள் தான். அதனால் ஜப்பானில் இருவரும் சேர்ந்து சம்பவம் செய்திருப்பார்கள் என தாரளமாக நம்பலாம். ஜப்பான் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கார்த்தி.
கார்த்தியின் பிறந்தநாளுக்கு அவரின் ரசிகர்களுக்கு இதை விட சிறப்பான ட்ரீட் கொடுக்க முடியாது. சரியான நேரத்தில் வீடியோ வெளியிட்ட ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு கார்த்தி ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Karthi:கார்த்தியின் வெற்றிக்கு காரணம் இந்த இரண்டு விஷயம் தான்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தி தன் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் கார்த்தியின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கமே கதி என்று இருக்கிறார்கள்.
பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவான கார்த்தி இன்று ஜப்பானாக ஆகியிருக்கிறார். இதற்கிடையே வந்தியத்தவேனாக மாறி உயிர் உங்களுடையது தேவி என இளசுகளைலாம் புலம்பவிட்டார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.