இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
HBD Karthi: சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என்கிற அடையாளத்தை தாண்டி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் கார்த்தி.
கார்த்திஅமெரிக்காவில் படித்த கார்த்தி நாடு திரும்பிய பிறகு மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை செய்தார். அதன் பிறகு அமீரின் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். வாழ்க்கையில் லட்சியமே இல்லாமல் அடிக்கடி சிறைக்கு சென்று வந்த ஒரு கிராமத்து இளைஞனாக வாழ்ந்திருந்தார். பருத்தி வீரன் பட போஸ்டர்களை பார்த்தவர்களோ, சிவகுமார் மகனாம்ல. அந்த மனுஷன் எம்புட்டு அழகாக இருப்பார். இந்த பையன் என்ன காட்டான் மாதிரி இருக்கிறார் என்றார்கள். படம் பார்த்த பிறகே அவர்களுக்கு கார்த்தி யார் என்பது புரிந்தது.
பார்த்திபன்”போன மாசமே கொன்னுட்டாங்க” நடிகர் பார்த்திபன் வேதனை!
பையாமுதல் படத்திலேயே அனைவரையும் மிரள வைத்தார் கார்த்தி. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று சொல்ல வைத்தார். முதல் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தில் நடிக்கவில்லை. ஒரு பிரேக் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். இந்த பையன் இது மாதிரியான படங்களில் தான் நடிக்கும்போல என்று விமர்சனம் எழுந்தது. அதன் பிறகே பையா படத்தில் மாடர்னாக வந்து பருத்திவீரன் இமேஜை உடைத்தார்.
சிறுத்தைசிவா இயக்கத்தில் சிறுத்தை படத்தில் டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியனாகவும், திருடன் ராக்கெட் ராஜாவாகவும் அழகாக நடித்தார். சகுனியில் வேற மாதிரி கதாபாத்திரத்தில் வந்தார். புதுப் புது கதாபாத்திரங்களில் நடிக்கத் தயங்காதவர் கார்த்தி. அது ரிஸ்க் தான் என்று தெரிந்தும் நடிப்பார். ஒரே ஜானரில் முடங்க மாட்டார். ரிஸ்க் எடுப்பது, வெரைட்டி கொடுப்பது தான் கார்த்தியின் வெற்றியின் ரகசியம் ஆகும்.
கைதிNayanthara: எங்க தியேட்டரை நயன்தாரா வாங்கிட்டாரா?: அகஸ்தியா தியேட்டர் நிர்வாகம்வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன் என்று தோல்விப் படங்களும் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜமப்பா என தொடர்ந்து தன் பாதையில் துணிந்து பயணம் செய்து வருகிறார். கைதி மாதிரியான படத்திலும் துணிந்து நடித்தார் கார்த்தி. பார்க்க ஒரு மாதிரியாக இருக்கார், படம் சீரியஸாக இருக்கு, அதை போய் விஜய்யின் பிகில் படத்துடன் ரிலீஸ் செய்கிறார்களே. இந்த கார்த்திக்கு என்னாச்சு என விமர்சனம் எழுந்தது. ஆனால் பிகில் படத்தால் கைதி வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை.
வந்தியத்தேவன்பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்தால் அதில் வந்தியத்தேவனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் பலர். ஆனால் அந்த கதாபாத்திரம் கார்த்திக்கு தான் என்று இருந்திருக்கிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்களில் வந்தியத்தேவனாக வந்து ரசிகைகளை கவர்ந்தார். உயிர் உங்களுடையது தேவி என்கிற ஒற்றை வசனத்தை வைத்தை அனைவரையும் ஈர்த்தார்.
ஜப்பான்கார்த்தி நடித்து முடித்திருக்கும் ஜப்பான் படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டர்களிலேயே கார்த்தி படு வித்தியசமாக இருக்கிறார். படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் போன்று. ஆக, கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல் என்றே சொல்ல வேண்டும். கார்த்தியால் எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் நடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: மீண்டும் சேரும் ஜெயிலர் கூட்டணி: அந்த 3வது ஆள் எட்டி உதைச்சா பென்ஸ் காரே பறக்குமே!