சென்னை: பருத்திவீரன் மூலம் அறிமுகமான கார்த்தி, இன்று மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார்.
கார்த்தியின் படங்களுக்கு என ரசிகர்களிடம் தனிப்பட்ட வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிலையில், கார்த்தி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சினிமாவில் அறிமுகமாகி மொத்தமே 15 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ள கார்த்தியின் சொத்து மதிப்பு, சம்பள விபரங்களை தற்போது பார்க்கலாம்.
கார்த்தியின் நெட் ஒர்த்
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2007ம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி, தற்போது தனது 25வது படமான ஜப்பான்-இல் நடித்து வருகிறார். முன்னணி நடிகரான சிவகுமாரின் மகனாகவும், நடிகர் சூர்யாவின் தம்பியுமாக அடையாளம் காணப்பட்டவர் கார்த்தி.
ஆனால், இன்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டதோடு, மினிமம் கியாரண்டி ஹீரோ என தயாரிப்பாளர்களின் நாயகனாக வலம்வருகிறார். இயக்குநராக வேண்டும் என்ற கனவோ மணிரத்னமிடம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக வேலை பார்த்தார் கார்த்தி. ஆனால், காலம் அவரை பருத்தி வீரனாக திரையில் ஆர்ப்பரிக்க வைத்தது. அங்கிருந்து தொடங்கியது கார்த்தியின் திரை பயணம்.
ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன், காற்று வெளியிடை, கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் என வெரைட்டியாக மாஸ் காட்டியுள்ளார். பொன்னியின் செல்வனை தொடர்ந்து தற்போது தனது 25வது படமான ஜப்பானில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி ஒரு படத்திற்காக 8 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல், விளம்பரங்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இதன்மூலம் ஆண்டுக்கு 13 முதல் 18 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் கார்த்தி. திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய 15 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 100 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்துவிட்டாராம். சென்னை தியாகராய நகரில் 30 கோடி மதிப்பில் வீடு உட்பட மேலும் ஒரு பிளாட்டை சொத்தமாக வைத்துள்ளார் கார்த்தி. அதேபோல், பல இடங்களில் விவசாய நிலங்களை வாங்கிப் போட்டுள்ளாராம்.
மேலும், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் Mercedes Benz ML 350 கார் வைத்திருக்கும் கார்த்தி, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், கார்த்தியின் வாட்ச், அவரது காஸ்ட்யூம் எல்லாமே விலையுயர்ந்த பிராண்டட் வகைகள் என சொல்லப்படுகிறது. மினிமம் கியாரண்டி ஹீரோவாக இருப்பதால் கார்த்தியை தேடி தயாரிப்பாளர்கள் கையில் அட்வான்ஸோடு காத்திருகின்றனர். இதனால் இன்னும் சில வருடங்களில் கார்த்தி 500 கோடிக்கு சொத்து சேர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.