‘லியோ’ படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் சோஷியல் மீடியாவை அதிர விட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் பேசியுள்ளது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் நடிப்பில் கடைசியாக கடந்த பொங்கல் ரிலீசாக ‘வாரிசு’ படம் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழியில் இந்தப்படம் ரிலீசானது. ‘வாரிசு’ சீரியல் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்தப்படத்திற்கு முன்பே விஜய், லோகேஷ் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், ‘வாரிசு’ பட ரிலீசை தொடர்ந்து ஒரு வாரம் கழித்தே ‘லியோ’ பட அறிவிப்பு வெளியானது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக ‘லியோ’ தற்போது உருவாகி வருகிறது. ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்தப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே இவர் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். அனால் அந்தப்படம் முழுக்க லோகேஷ் பாணியில் இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் ‘மாஸ்டர்’ படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்றில் ‘லியோ’ குறித்து பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Vidaamuyarchi: அஜித்துக்கு ஜோடியாகும் திரிஷா.?: ‘விடாமுயற்சி’ படத்தில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்.!
அதில், ‘லியோவை பான் இந்தியா படமாக பண்ணலாம் என சொல்லும் போது விஜய் அதெல்லாம் வேண்டாம்ப்பா. நம்ம மக்களுக்கு பண்ணுவோம் என கூறிவிட்டதாகவும், அதன் பிறகு தானும் லோகேஷும் சேர்ந்து அடுத்த லெவலுக்கு போக வேண்டும் என விஜய்யை சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக, இந்தப்படத்தை புரமோஷனிலே பான் இந்தியா அளவிற்கு கொண்டு போக திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி பூஜை போட்டு இந்த வருடம் ஜனவரி 2 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டதாகவும், அதன்பிறகே ‘வாரிசு’ படம் ரிலீஸ் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
Karthi: ஜப்பான் யாரு..?: மரண மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி படக்குழு.!
இந்தப்படத்தின் ரிலீஸ் வரை ‘லியோ’ படம் குறித்து பேசக்கூடாது என்பதை அனைவரும் பாலோ பண்ணியதாகவும் கூறியுள்ளார். மேலும், காஷ்மீர் ஷெட்யூல் ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு டெஸ்ட் மேட்ச் போல் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக ‘லியோ’ அப்டேட்டை வெளியிட்டு பான் இந்தியா அளவில் படத்தை கொண்டு போனதாகவும், நார்த் சைடில் இந்தப்படத்திற்காக விளம்பரம் கொடுத்து புரமோஷன் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ‘லியோ’ படம் குறித்து லலித் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.