இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் Oneplus 11
ஸ்மார்ட்போனில்
புதிய Marble Odyssey கலர் ஆப்ஷன் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. இந்த போன் தற்போது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டிஸ்பிளே வசதிஇதில் 6.7 இன்ச் Quad HD+ (1440×3216 Pixels) 10 பிட் LTPO 3.0 AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 120HZ Refresh rate, 1000HZ டச் சாம்ப்ளிங் ரேட், 525 ppi Pixel Density, Corning Gorilla Glass Victus பாதுகாப்பு போன்றவை உள்ளன.கேமரா வசதிகள்இதற்காக Oneplus நிறுவனம் 50MP OIS (Optical Image Stabilization) உள்ள Sony IMX890 சென்சார், 48MP அல்ட்ரா வைட் Sony IMX 581 சென்சார், 32MP டெலிபோட்டோ Sony IMX 709 சென்சார் வசதி, முன்பக்கம் 16MP Sony IMX 471 சென்சார் வசதியுள்ள செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.திறன் வசதிஇந்த போனில் டூயல் நானோ சிம் வசதி, Android 13 OS சார்ந்து உருவாக்கப்பட்ட Oxygenos 13, Octa Core Qualcomm Snapdragon 8 Gen 2 SoC சிப் வசதி, Adreno 740 GPU, 16GB வரை LPDDR5X RAM, 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் வசதி இடம்பெற்றுள்ளது.பேட்டரி மற்றும் சிறப்பு வசதிகள்இதன் பேட்டரி அளவு 5000mAh ஆகும். இதனுடன் 100W Super VOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதை நாம் முழுதாக சார்ஜிங் செய்ய 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும். கூடுதலாக 5G, 4G, WiFi 7, ப்ளூடூத் 5.3, GPS, A-GPS, NFC, USB 2.0 Type C போர்ட் கனெக்டிவிட்டி வசதி, 205g எடை உள்ளது.விலை விவரம் (Oneplus 11 Price)இந்த போன் Eternal Green, Titan Black ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்போது புதிய கலர் ஆப்ஷனாக Marble Odyssey கலரில் கிடைக்கிறது. இதன் வெளியீடு எப்போது என்பது தெரியவில்லை.
இதன் 16GB RAM + 256GB வேரியண்ட் விலை 64,999 ஆயிரம் ரூபாயில் தொடங்குகிறது. மற்ற கலர்களில் இதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 56,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், 12GB + 256GB ஸ்டோரேஜ் மாடல் 61,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்