Prime Minister Modi came to India | தமிழ்மொழி இந்தியர்களின் மொழி – டில்லி திரும்பிய பிரதமர் மோடி பெருமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்.

கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.

ஜப்பானில் நடந்த, ‘ஜி – 7’ மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார். பின் ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, சிட்னியில் மிக பிரமாண்ட விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றினார். பயணத்தை நிறைவு செய்த நிலையில், நேற்று(மே 24) மாலை இந்தியா புறப்பட்டார். இன்று காலையில் வந்து சேர்ந்த பிரதமரை டில்லியில் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து பாஜ சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் நலனே இலக்கு

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற போது உலக தலைவர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து பேசியதை நினைந்து மகிழ்கிறேன். ஜி-20 மாநாடு குறித்தும் அனைவரும் பாராட்டி பேசினர். இது அனைத்து இந்தியர்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த சந்திப்பில் எனது முழு நேரத்தையும் இந்தியாவின் பெருமைக்காகவே நாட்டின் நலனுக்காக செலவழித்தேன். கோவிட் காலத்தில் இந்தியா எடுத்த முயற்சிகள் மற்றும் தடுப்பூசியை பலரும் பாராட்டினர். இந்தியா புத்தர் ,காந்தி பிறந்த மண். நாம் எதிரிகளுக்காகவும் கவலைப்படுகிறோம். ஏனெனில் நாம் இரக்கம் கொண்டவர்கள்.

உலகமே இந்தியாவை உற்று நோக்கி கவனிக்கிறது. இந்தியாவின் பெருமையை நினைந்து பார்க்கிறது. இந்திய கலாசாரத்தை உலகம் போற்றுகிறது.என்பதை இந்த வெளிநாட்டு பயணத்தில் உணர முடிந்தது.

திருக்குறள் வெளியீடு

பப்புவா நியூ கினியா நாட்டில், அந்நாட்டு மொழியில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன். தமிழ் மொழி நமது மொழி, உலகில் சிறந்த, மிகப்பழமையான மொழி. தமிழ்மொழி இந்தியர்களின் மொழி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.