ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் குற்ற வாளிகள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கான வெகுமதியை அந்த மாநில அரசு உயர்த்திஉள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை வெகுமதி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, இந்தத் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு மாநில நிதித் துறை அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பான உத்தரவை இணைச் செயலர் ஜக்வீர் சிங் நேற்று பிறப்பித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
டி.ஜி.பி., பதவியில் உள்ளவர்கள் குற்றவாளிகள் குறித்த தகவல்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்ட நிலையில், இது இப்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பரிசுத் தொகையை 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க கூடுதல் டி.ஜி.பி.,க்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஐ.ஜி., மற்றும் துணை ஐ.ஜி., ஆகியோர் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வெகுமதியாக அறிவிக்கலாம்.
மாவட்ட எஸ்.பி.,க்கள் குற்றவாளிகள் குறித்த தகவல்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை வெகுமதியாக அறிவிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement