சென்னை: Thalapathy 68 Heroine (தளபதி 68 ஹீரோயின்)விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்துக்கான ஹீரோயினை வெங்கட் பிரபு ஃபிக்ஸ் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு ஜாலியான படங்களை இயக்குவதற்கு பெயர் போனவர். அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் பார்ப்பதற்கு ரொம்பவே ஜாலியாக இருக்கும் என ரசிகர்கள் கூறுவார்கள். இதனையடுத்து அவர் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு ஒரு மெகா ஹிட் கிடைத்தது. மேலும் முன்னணி இயக்குநர் என்ற வரிசையிலும் இணைந்தார் வெங்கட் பிரபு.
மாநாடு சம்பவம்: மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்கள் தோல்வியடைந்தன. அப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் மீண்டும் வெங்கட் பிரபு சென்சேஷனல் ஆனார்.

அடி கொடுத்த கஸ்டடி: மாநடுக்கு பிறகு நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக உருவான அந்தப் படம் கடந்த வாரம் ரிலீஸானது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் இல்லாததால் பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. நல்ல ஒன்லைனாக இருந்தாலும் திரைக்கதையில் வெங்கட் சொதப்பிவிட்டார் என்றே பலரும் கூறினர். வசூலும் எதிர்பார்த்தைவிட மிக மிக குறைவாக இருந்தது.
தளபதி 68: இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் 68ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என்ற தகவல் தீயாக பரவியது. அதனை உறுதிப்படுத்தி சில நாள்களுக்கு முன்னர் அறிவிப்பும் வெளியானது. படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல் விஜய்க்கு இந்தப் படம் அமையும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.

பூஜை எப்போது ஹீரோயின் யார்?: லியோ படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் விஜய் 68 அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறினாலும்; படத்தின் பூஜை எப்போது என்பது குறித்தும், ஹீரோயின் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் பூஜை நடக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதேபோல்,படத்தின் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டியை வெங்கட் பிரபு ஃபிக்ஸ் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கஸ்டடி படம் தோல்வி அடைந்தாலும் அதில் கீர்த்தி ஷெட்டியின் டெடிகேஷனை பார்த்த வெங்கட் பிரபு அவரை தளபதி 68க்கு ஹீரோயினாக முடிவு செய்துவிட்டாராம். கீர்த்தி ஷெட்டி விஜய்யின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.