The daughter who killed her father with a mercenary force was arrested | கூலிப்படை வைத்து தந்தையை கொன்ற மகள் அதிரடி கைது

நாக்பூர், மஹாராஷ்டிராவில், தந்தையைக் கூலிப்படை வைத்து கொலை செய்த மகளை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மஹாராஷ்டிராவில் உள்ள நாக்பூரைச் சேர்ந்த 60 வயது நபருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ள நிலையில், அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார்.

மனைவியின் பெயரில் உள்ள பண்ணை வீடு, பெட்ரோல் பங்க் உள்ளிட்டவற்றை தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என மனைவி, மகளை அவர் மிரட்டி வந்துள்ளார்.

சமீபத்தில், இது குறித்து தன் மனைவி மற்றும் மகளுடன் அந்த நபர் தகராறில் ஈடுபட்டு, கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த 35 வயது மகள், தன் தந்தையைக் கொல்ல அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை 5 லட்சம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து, பிவாபூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில், கடந்த 17ம் தேதி அந்த நபரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர்.

கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கூலிப்படையினரை கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இறந்தவரின் மகளை நேற்று கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.