இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் வாடகை கார்கள் (Cabs) பயன்பாடு அதிகரித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகள் முதல் தினசரி வேலை, வெளியூர் செல்பவர்கள் வரை பலரும் கேப்பில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கேப் இல்லாத சூழலை பலரால் ஜீரணிக்கவே முடியாது.
வாடகை கார் பயணம்
இது மேல் நடுத்தர வர்க்க மற்றும் உயர் வகுப்பை சேர்ந்தவர்களின் தினசரி பயன்பாட்டில் ஒன்றாக மாறிப் போய்விட்டது. ஆனால் பீக் ஹவர் (Peak Hours), லேட் நைட் (Late Night) போன்ற காலகட்டங்களில் கட்டணம் தாறுமாறாக எகிறி விடுகிறது. இதுதவிர முன்பதிவு செய்யும் போது ஒரு கட்டணம் காண்பிக்கும். நேரில் கேப் வந்து நாம் ஏறிக் கொண்டதும் 50, 100 ரூபாய் கூடுதலாக தருகிறீர்களா?
பெங்களூரு சம்பவம்
அதுவும் கையில் காசை வைக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கின்றனர். கடைசி நேரத்தில் செய்வதறியாது பலரும் சம்மதம் தெரிவித்து விடுகின்றனர். இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறதே எனப் புலம்பி தவிப்பதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் பெங்களூரு சில்க் போர்டு பகுதியில் வசிக்கும் ஒருவர், தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்படியென்ன விஷயம் என்கிறீர்களா? எல்லாம் கேப் கட்டணம் தான்.
கேப் கட்டணமா? ஃப்ளைட் டிக்கெட்டா?
இதுதொடர்பாக ஸ்கிரீன் ஷாட் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் உபர் நிறுவனத்தின் கேப்கள் கட்டண வாரியாக இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட நபர் பெங்களூரு நகரின் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையம் செல்லும் கேப்பை முன்பதிவு செய்ய திட்டமிட்டார். இதற்காக உபர் மொபைல் ஆப் மூலம் காலை 6.15 மணியளவில் கேப்பை தேடும் போது கிடைத்த கட்டண விவரங்கள் பெரும் அதிர்ச்சியூட்டியுள்ளன.
சென்னையிலும் இப்படித்தான்
இவ்வாறு விவரங்கள் இடம்பெற்றன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், இதென்ன… விமானத்தில் நான் பயணிப்பதற்கு கொடுத்த டிக்கெட் விலை போல தாறுமாறாக இருக்கிறதே என குற்றம்சாட்டியுள்ளார். இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்று மனக் குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை ஒழுங்குபடுத்த அரசு ஏதேனும் சட்டங்கள் கொண்டு வரக் கூடாதா? என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. பெங்களூரு மட்டுமல்ல, சென்னையிலும் இப்படியான பகீர் கேப் சம்பவங்களை அதிகம் பார்க்கலாம் என்கின்றனர் நெட்டிசன்கள்.