இந்த ஐடி ரெய்டு இவர் தூண்டிவிட்டதால் தான் நடந்தது ..!!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க நினைத்தது பாஜக. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. வருமான வரித்துறை சோதனை பற்றி கவலை இல்லை. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை திசை திருப்பவும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் நடவடிக்கைகளை முடக்கவும் அண்ணாமலை தூண்டிவிட்டதுதான் இந்த ஐ.டி. ரெய்டு. பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியலை இது காட்டுகிறது. தமிழகத்திற்கு வரும் முதலீடு செய்திகளை மழுங்கடிக்கும் விதமாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இதை பார்த்து அஞ்சப்பட்டோம்.

கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே ரூ.2,000 நோட்டு திரும்பப்பெறும் முடிவை அரசு எடுத்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் என்பது போன்று திட்டமிட்டு தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க நினைக்கின்றார்கள். எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகிறது. பாஜகவை பற்றி தெரிந்து கொள்வீர்கள் என செந்தில் பாலாஜியை அண்ணாமலை அண்மையில் மிரட்டியிருந்தார்.

வெளிநாட்டு முதலீடுகள் தமிழிநாடு வருவது பற்றிய செய்திகளை மழுங்கடிக்கவே இந்த ரெடு நடத்தப்படுகிறது. ஐடி, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி விடலாம் என எண்ணுகிறார்கள். கோவை கரூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் திமுகவை வெற்றி பெற்று தந்ததால் , செந்தில் பாலாஜியை முடக்கவே இந்த ரெய்டு நடக்கிறது. மிட் நைட் மசாலா போன்று இரவு 3 மணிக்கு ரைய்டுக்கு வந்துள்ளனர். வருவது கொலை காரனா , போலீசா , கொள்ளைகாரனா எப்படி தெரியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.