அவசர சட்டத்தின் மூலம்
காங்கிரஸ்
உடன் அரவிந்த் கெஜ்ரொவாலின் ஆம் ஆத்மி கட்சி இணைந்து செயல்பட ஒன்றிய பாஜக அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு நாடாளுமன்றதில் எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல் காந்தியையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சசிகலா – ஓபிஎஸ் சந்திப்பு எப்போது? தள்ளிப் போகும் காரணம் என்ன?
அந்த பதிவில், “பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜனநாயக விரோதமான அரசியலமைப்புக்கு எதிரான அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிப்பு தெரிவிக்கக் கோரியும், தற்போதுள்ள ஜனநாயகத்துக்கு எதிரான அரசியல் போக்கு குறித்து விவாதிக்கவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தியை சந்திக்க இன்று காலை நேரம் கேட்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கோரியுள்ளார். விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆதரவு கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பல்வேறு கட்சியினரை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது.
பள்ளிகள் திறப்பில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!
தற்போது காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மி இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வாய்ப்பை பாஜகவே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.