அமைச்சர் செந்தில் பாலாஜியை போனில் தொடர்பு கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடிந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா ஆட்சிமறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. திமுகவில் இணைந்ததுமே அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஸ்டாலின்.
திமுக அமைச்சர்கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு 5வது முறையாக எம்எல்ஏவான செந்தில் பாலாஜி, திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் கலால் ஆயத்தீர்வை அமைச்சரானார்.
செந்தில் பாலாஜி வழக்குஇந்நிலையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கே செந்தில்பாலாஜிக்கு தலைவலியாக இருந்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டீலுக்கும் 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வைத்து விற்பனை செய்யுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார் என வெளியான ஆடியோவும் அவருக்கு பெரும் சறுக்கலாய் இருந்தது.
வருமான வரித்துறை சோதனைஇந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
வாகனங்கள் சேதம்இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். இதனை அறிந்த திமுகவினர் அங்கு திரண்டனர். அப்போது வீடு பூட்டியிருந்ததால், அதிகாரிகள் வீட்டிற்கு வெளியே காத்திருந்தனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்ட திமுகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களையும் உடைத்து சேதப்படுத்தினர்.
மருத்துவமனையில் அனுமதிஇதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 12 வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் திமுகவினர் தாக்கியதாக 4 அதிகாரில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கரூரில் நிலைமை கை மீறி போவதை உணர்ந்த உள்துறை செயலாளரான அமுதா ஐஏஎஸ் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
போன் போட்ட உதயநிதி ஸ்டாலின்முதல்வர் முக ஸ்டாலின் ஊரில் இல்லாததால், அடுத்த ஆப்ஷனாக உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்ட உள்துறை செயலாளர் அமுதா, நிலைமையை புரிய வைத்துள்ளார். உடனடியாக செந்தில் பாலாஜிக்கு போன் போட்ட உதயநிதி ஸ்டாலின், தலைவர் ஊரில் இல்லாத நேரத்தில் என்ன இதெல்லாம்? உங்க ஆட்களை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது என கடிந்ததாக கூறப்படுகிறது.
வேற மாதிரி ரியாக்ஷன்இதையடுத்து செந்தில் பாலாஜி வழியாக உடன் பிறப்புக்களுக்கு உத்தரவு பறக்க அமைதி காக்க தொடங்கினார்களாம். அதோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட முக்கிய தலைகள் சிலரும் உடல் நலக்குறைவு என மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்களாம். வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் விரட்டியது கட்சிக்குள்ளேயே வேற மாதிரி ரியாக்ட் ஆகும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்…