நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவுகளை பயணி ஒருவர் திடீரென திறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவானில் திறந்த விமானத்தின் கதவு
வெள்ளிக்கிழமை OZ8124 என்ற ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் (Asiana Airlines) ஜெஜு(Jeju) தீவில் இருந்து தென்கொரியாவின் டேகு(Daegu) நகர் நோக்கி பறந்து கொண்டு இருந்தது.
சுமார் 194 பயணிகளுடன் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கதவை நடுவானில் திறந்துள்ளார்.
The #Asiana Airlines plane has landed safely at Daegu International Airport after the door opened during the flight, causing breathing difficulties for six passengers, @YonhapNews reported on Friday, citing officials at Daegu Airport. pic.twitter.com/607VbFjBtL
— Ifeng News (@IFENG__official) May 26, 2023
இதனால் விமானத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, அத்துடன் பல பயணிகள் மூச்சுத்திணறலில் பாதிக்கப்பட்டனர்.
பின் திறந்த கதவுகளுடன் பறந்த விமானம் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை விமான பயணி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
GETTY IMAGES
இளைஞர் கைது
இதையடுத்து விமானத்தின் கதவை திறந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையை ஏசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் முடக்கி விட்டுள்ளது. மேலும் அவசரகால கதவின் அருகே அமர்ந்து இருந்த பயணி அதன் பிடியை தொட்டத்தால் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக ஏர்லைன்ஸ் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
Hàn Quốc 26/05/2023: Cửa thoát hiểm của máy bay A321-231 số hiệu OZ8124 của Asiana Airlines trên đường từ Jeju-si đến Daegu bị mở khi đang bay trên không trung làm ít nhất 9 hành khách bị thương với triệu chứng khó thở pic.twitter.com/3Uno0n2I6f
— Ông Tám Bà Tám (@ongtambatam) May 26, 2023
இதற்கிடையில் விமானத்தின் கதவை சம்பந்தப்பட்ட பயணி எதற்காக திறந்தார் என்பதற்கான நிச்சயமான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் 9க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவ முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Yonhap/AFP