ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் க்ரூஸர் ரக மீட்டியோர் 350 மாடலின் புதுக்கப்பட்ட வேரியண்ட் ஸ்போக் வீல் கொண்டு பல்வேறு ரெட்ரோ அம்சங்களை பெற்றதாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டின் புதிய J- பிளாட்ஃபாரத்தில் வெளிவந்த மாடலான மீட்டியோர் 350 தற்பொழுது கூடுதலான சில மேம்பாடுகளை பெற்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
2023 RE Meteor 350
மீட்டியோர் 350 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற கேஸ்ட் அலாய் வீலுக்கு மாற்றாக கம்பி-ஸ்போக் வீல் பெற்று, தற்போதைய பைக்கைக் காட்டிலும் இன்ஜின் பாகங்கள் குறைவான கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. ஸ்டாண்டர்ட் பைக்கின் ஹெட்லைட் ஹவுசிங் வழங்கப்பட்டு பல்வேறு இடங்களில் க்ரோம் பாகங்கள் மற்றும் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் புதிய மீட்டியோர் 350 பைக்கினை ராயல் என்ஃபீல்டு விற்பனைக்கு கொண்டு வரவாய்ப்புகள் உள்ளது.
மீட்டியோரின் 350 மாடலில் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய லாங் ஸ்ட்ரோக் ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. மூன்று விதமான வேரியண்டில் மாறுபட்ட நிறங்கள் மற்றும் டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது.