தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். படங்கள் பைக் டூர் என படு பிசியாக இருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக ‘விடாமுயற்சி’ படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் படு வேகமாக வைரலாகி வருகின்றன.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அஜித் கடைசியாக ‘துணிவு’ படத்தில் நடித்திருந்தார். கடங்க பொங்கலுக்கு ரிலீசான இந்தப்படத்தில் அஜித், எச். வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருந்தது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான இந்தப்படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் ரிலீசான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு ‘ஏகே 62’ பட வேலைகள் துவங்கியிருக்க வேண்டியது. ஏனென்றால் ‘துணிவு’ பட ரிலீசுக்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அஜித், விக்னேஷ் சிவன் காம்போ எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் தான் திடீரென விக்கி இந்தப்படத்திலிருந்து விலகினார். ‘ஏகே 62’ படத்திற்காக அவர் உருவாக்கிய கதை தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காததால் இந்த விலகல் நடந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக ‘ஏகே 62’ படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி கைப்பற்றினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிவிப்பு ‘விடாமுயற்சி’ என்ற டைட்டிலுடன் கடந்த மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளன்று வெளியானது.
Pichaikkaran 2: ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் வெற்றி: விஜய் ஆண்டனி செய்துள்ள நெகிழ்ச்சியான காரியம்.!
இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவிருந்த நிலையில் தற்போது தள்ளிப்போயுள்ளது. இதனால் அஜித் தற்போது பைக் டூரில் பிசியாக இருக்கிறார். கேரளாவில் உள்ள அஜித், அங்கு ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அஜித் சற்று உடல் எடையை குறைத்தது போல் இருப்பதால் ‘விடாமுயற்சி’ படத்திற்காக அவர் தயாராகி வருகிறாரா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், இதன் படப்பிடிப்பு பணிகள் ஜுன் மாத இறுதியில் துவங்கப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது ஏகே மோட்டோ ரைடு நிறுவனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Dhruva Natchathiram: தங்கலானுக்கு முன்பாக ரிலீசாகும் விக்ரம் படம்: வெளியான தாறுமாறு தகவல்.!