சென்னை: venkat Prabhu (வெங்கட் பிரபு) இயக்குநர் வெங்கட் பிரபு மீது அஜித்குமார் ரொம்பவே கோபமடைந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர் என்ற பெயரையும் அடுத்தடுத்து அவர் இயக்கிய சரோஜா, கோவா உள்ளிட்ட படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு உணர்த்தின.
அஜித்துடன் ஆடிய ஆட்டம்:
முதல் மூன்று படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்க கமிட்டானார் வெங்கட் பிரபு. அஜித்தின் படத்தை அதுவும் 50ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா என்றே பலரும் ஆச்சரியத்துடன் அந்த சமயத்தில் கேள்வி எழுப்பி; படம் ஹிட்டாகிவிடுமா என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால் யாரும் எதிர்பார்காதபடி படமானது மெகா ஹிட்டானது. குறிப்பாக கதையில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் தியேட்டரில் அனைவரையுமே வாய் பிளக்க வைத்தது.
சறுக்கிய வெங்கட் பிரபு:
மங்காத்தா படம் மெகா ஹிட்டான பிறகு சென்சேஷனல் இயக்குநராக மாறினார் வெங்கட் பிரபு. ஆனால் அதற்கடுத்து அவர் இயக்கிய படங்கள் தோல்வியையே சந்தித்தன. இப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி தனது ஸ்க்ரீன்ப்ளேவில் மேஜிக் செய்ய படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக மீண்டும் முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தார் வெங்கட் பிரபு.
தளபதி 68:
அவரது இயக்கத்தில் கடைசியாக கஸ்டடி படம் ரிலீஸானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு வெங்கட் பிரபு கமிட்டாகியிருக்கிறார். இதற்கான அறிவிப்புசமீபத்தில் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது. பத்து மாதங்களுக்கு முன்பு சொன்ன கதையை விஜய் ஓகே செய்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அஜித்துக்கு எப்படி ஒரு மங்காத்தாவோ அதுபோல் இந்தப் படம் விஜய்க்கு அமையும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
மங்காத்தா 2:
இதற்கிடையே மங்காத்த படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்துக்கான லீடை கொடுத்திருப்பார் வெங்கட் பிரபு. இதன் காரணமாக மங்காத்தா 2 படம் எப்போது தயாராகும் என தொடர் கேள்விகள் வெங்கட் பிரபுவை துரத்திக்கொண்டிருந்தன. அவரும் சில பேட்டிகளில் அஜித் சார் ஓகே சொன்னார்னா மங்காத்தா 2வை எடுத்துவிடுவேன் என கூறிவந்தார்.
இது ஒருபுறம் இருக்க அவரது தந்தை கங்கை அமரனும் சில பேட்டிகளில் விஜய்யையும், அஜித்தையும் ஒன்றாக வைத்து இயக்கக்கூடிய கதை வெங்கட்டிடம் இருக்கிறது என்றும் சொல்லிவந்தார். இதனையடுத்து அது மங்காத்தா 2 படத்தின் கதையாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதிவந்தனர். மேலும், விஜய் 68 படத்தில் அஜித் கேமியோவில் தோன்றுவாரா என கேள்வி எழுந்த சூழலில் இல்லை என கூறி அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுபுள்ளி வைத்துவிட்டார்.
கடுப்பான அஜித்:
ஆனால் மங்காத்தா 2 படம் பேச்சுக்களை அஜித்குமார் உண்மையிலேயே விரும்பவில்லை என கூறப்படுகிறது. பொதுவாக அதிகாரப்பூர்வமாக ஒரு இயக்குநரின் படத்தில் கமிட்டானால் மட்டும்தான் தன்னை பற்றி அந்த இயக்குநர் பேசுவதை விரும்புவாராம் அஜித். ஆனால் மங்காத்தா 2 பற்றி வெங்கட் பிரபுவும், அவரது தந்தையும் தொடர்ந்து பேசியதால் ரொம்பவே கடுப்பாகிவிட்டாராம் அஜித்.
இதன் காரணமாகத்தான் ஏகே 62 படத்திலிலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து படத்தை இயக்கப்போகும் இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருந்த வெங்கட் பிரபுவின் பெயரை தூக்கிவிட்டாராம் அஜித். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலும் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.