ஹிஜாப்பைக் கழட்ட சொன்ன பாஜக நிர்வாகி கைது.. காவல்துறை அதிரடி..!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த டாக்டர் ஜன்னத் என்பவர் புதன்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார்.

அப்போது திருப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் புவனேஸ்வர் ராம் தனது உறவினர் சுப்பிரமணியனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது நெஞ்சு வலியால் துடித்த சுப்பிரமணியனை சோதித்த ஜன்னத் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக உடனே தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத புவனேஸ்வர் ராம். இங்கேயே தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார். அதோடு டாக்டர் ஜன்னத் ஹிஜாப் அணிந்து கொண்டு பணியில் இருந்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அரசு பணியின் போது மருத்துவர் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும். மருத்துவருக்கு என்று சீருடை கிடையாதா? உண்மையிலேயே நீங்கள் மருத்துவர் தானா? என்று கேள்வி எழுப்பிய புவனேஸ்வர் ராம் பெண் மருத்துவரை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

ஒரு பெண்ணை அனுமதி இன்றி வீடியோ எடுப்பது அநாகரீகம். இரவில் பணியில் இருக்கும் பெண் மருத்துவரிடம் இப்படி நடந்து கொள்வது தவறு. என்று தெரிவித்த டாக்டர் ஜன்னத், தனது செல்போனில் புவனேஸ்வர் ராமின் அத்துமீறலை வீடியோ எடுத்தார். இவர்கள் இருவரும் எடுத்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஹிஜாப் விவாகர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக நிர்வாகி புவனேஸ்வர் ராமை கைது செய்ய கோரியும் திருப்பூண்டி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.

புவனேஸ்வர் ராமை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து டாக்டர் ஜன்னத் அளித்த புகாரின் பேரில் புவனேஸ்வர் ராம் மீது கீழையூர் போலீசார் அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அவரின் அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் காரணமாக புவனேஸ்வர் ராம் தலைமறைவானார். இதற்கிடையே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சுப்பிரமணியன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். புவனேஸ்வர் ராமை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் புவனேஸ்வர் ராமை போலிசார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.