அகமதாபாத்,
ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் தொடரில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதி சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், மழை காரணமாக ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் மழை நின்ற பிறகு ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Related Tags :