மாருதி ஜிம்னி காருக்கு சவால் விடுக்கும் 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் அல்லது அர்மடா எஸ்யூவி மாடலை 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தார் எஸ்யூவி மாடல் 1,00,000 விற்பனை இலக்கை கடந்த நிலையில், இன்றைக்கு நடைபெற்ற Q4 மற்றும் FY23 முடிவுகளுக்கான சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், மஹிந்திரா & மஹிந்திரா செயல் இயக்குனர் (ஆட்டோ மற்றும் விவசாயம்) ராஜேஷ் ஜெஜூரிகர், கூறுகையில் 2023 ஆம் ஆண்டில் எந்த புதிய மாடலும் விற்பனைக்கு வராது என குறிப்பிட்டுள்ளார்.
Mahindra Thar 5 Door
2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள 5 கதவுகளை கொண்ட மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலுக்கு மஹிந்திரா அர்மடா என்ற பெயரில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய தார் காரில் புதிய கிரில் வடிவமைப்பை பெறலாம். சோதனை ஓட்டத்தில் உள்ள மாடல் பல்வேறு சிறிய அளவிலான வடிவ மாற்றங்களை கொண்டிருக்கலாம்.
கூடுதல் கதவுகளுக்கு இடமளிக்கும் வகையில் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் பெற்றிருப்பதுடன், புதிய அலாய் வீல் கொண்டிருக்கலாம். பின்புறத்தில் பெரிதாக மாற்றமில்லாமல் அமைந்திருக்கலாம்.
மஹிந்திரா அர்மடா எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5000 RPMல் 150hp குதிரைத்திறன் மற்றும் 1500-3000rpm-ல் 320 Nm முறுக்குவிசை (ஆட்டோமேட்டிக்) மற்றும் 1250-3000rpm-ல் 300 Nm முறுக்குவிசை (மேனுவல்) வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
அதிகபட்சமாக 3750 RPM -ல் 130 hp குதிரைத்திறன் மற்றும் 300 Nm முறுக்குவிசை திறனை 1600 – 2800 RPM -ல் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
புதிய 5 கதவு தார் அல்லது மஹிந்திரா அர்மடா எஸ்யூவி மாடலின் விலை ₹ 15 லட்சத்தில் துவங்கலாம்.