60 வயதில் 2வது திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகர்: முதல் மனைவி வெளியிட்ட பதிவு


பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரது மனைவி வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது.

தமிழ்ப்பட நடிகர்

தமிழில் தில், பாபா, கில்லி, ஏய், கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இந்தி நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது மனைவி ராஜோஷியை விவாகரத்து செய்த நிலையில், ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

60 வயதில் 2வது திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகர்: முதல் மனைவி வெளியிட்ட பதிவு | Ashish Vidyarthi Second Marriage First Wife Post

ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவர் வாழ்த்துக்களையும், சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

ஆஷிஷ் வித்யார்த்தி/Ashish Vidyarthi

முதல் மனைவியின் பதிவு

இந்த நிலையில் ஆஷிஷின் முதல் மனைவி ராஜோஷி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. அவரது பதிவில்,

‘வாழ்க்கையில் சரியான நபர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தேவை என்று அவர்கள் உங்களிடம் கேட்ட மாட்டார்கள்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு தீங்கு ஏற்படும் என்று தெரிந்த விடயங்களை செய்ய வேண்டாம். குழப்பங்கள் நீங்கி உங்கள் வாழ்க்கை அமைதியால் நிரம்பட்டும். நீங்கள் ஆசீர்வாதங்கள் பெறும் நேரமிது. நீங்கள் அதற்கு தகுதியானவர்’ என கூறியுள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி/Ashish Vidyarthi

ராஜோஷிக்கு தனது முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.       

60 வயதில் 2வது திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகர்: முதல் மனைவி வெளியிட்ட பதிவு | Ashish Vidyarthi Second Marriage First Wife Post



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.