ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை திறக்க 2 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி எந்த தேதியில் பள்ளி திறப்பு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
newstm.in