Karthi:ஆசையா படம் பார்க்க போன கார்த்தி: தியேட்டரை விட்டு விரட்டிய நிர்வாகத்தினர்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Karthi interview: ஆமிர் கான், ஊர்மிளா நடிப்பில் வெளியான ரங்கீலா படத்தை பார்த்துக் கொண்டிருந்த கார்த்தியை தியேட்டரில் இருந்து வெளியேற்றியது உங்களுக்கு தெரியுமா?

​கார்த்தி​Karthi:கார்த்தியின் வெற்றிக்கு காரணம் இந்த இரண்டு விஷயம் தான்அமெரிக்காவில் படித்த கார்த்தி நாடு திரும்பிய பிறகு அவரின் கவனம் சினிமா பக்கம் சென்றது. கேமராவுக்கு பின்னால் இருக்கலாம் என முடிவு செய்து மணிரத்னத்திடம் உதவியாளராக வேலை செய்தார். ஆனால் அவர் ஹீரோவாக வேண்டும் என்பது கடவுளின் திட்டம். இதையடுத்தே அமீரின் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவானார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் கார்த்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள்.மிஷ்கின்​விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!​​தியேட்டர்​கார்த்தி படம் ரிலீஸானால் அதை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். ஆனால் பெரிய ஹீரோவான கார்த்தியை ஒரு தியேட்டரில் இருந்து விரட்டிவிட்டது உங்களுக்கு தெரியுமா?. அந்த சம்பவம் நடந்தபோது கார்த்தி ஒரு நடிகர் இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரியில் படித்தபோது நண்பர்களுடன் சேர்ந்து தியேட்டருக்கு சென்றிருக்கிறார் கார்த்தி.
​ரங்கீலா​ஆமீர் கான், ஊர்மிளா நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான ரங்கீலா இந்தி படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற கார்த்தியை தான் வெளியேற்றியிருக்கிறார்கள். இது குறித்து பொன்னியின் செல்வன் படத்தை விளம்பரம் செய்ய மும்பை சென்றபோது கார்த்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது, நான் கல்லூரியில் படித்தபோது நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன் என்றார்.
​விரட்டினார்கள்​கார்த்தி மேலும் கூறியதாவது, ரங்கீலா படம் பார்க்க தியேட்டருக்கு சென்றதை மறக்கவே மாட்டேன். தன்ஹா தன்ஹாவை பார்க்க நானும், நண்பர்களும் தியேட்டருக்கு சென்றோம். நாங்கள் தியேட்டருக்குள் ஓடிக் கொண்டிருந்தோம். இதையடுத்து எங்களை வெளியேற்றிவிட்டார்கள். அடுத்த ஷோக்களுக்களுக்கான டிக்கெட்டுகள் வாங்கியதால் மீண்டும் உள்ளே சென்றோம். தன்ஹா தன்ஹா பாடலை கேட்டாலே எனக்கு கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வரும் என்றார்.

​வளர்ச்சி​தியேட்டருக்குள் ஓடி, ஆட்டம் போட்டால் வெளியே தான் அனுப்புவார்கள். அதனால் கார்த்தியை வெளியேற்றியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இன்று கார்த்தியால் பலரும் தியேட்டர்களுக்கு செல்கிறார்கள். எப்படி இருந்த கார்த்தி எப்படி ஆகிவிட்டார். இது தான்யா உண்மையான வளர்ச்சி.
​ஜப்பான்​கார்த்தியின் ஜப்பான் டீஸர்..ஹீரோ, வில்லன், காமெடியன், த்ரீ இன் ஒன்!கார்த்தி நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ராஜுமுருகன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜப்பான் பட டீஸரை வெளியிட்டார்கள். அந்த டீஸரில் யார் இந்த ஜப்பான் என்பதை காட்டியிருந்தார்கள். ஹீரோ, வில்லன், காமெடியனாக வருகிறார் ஜப்பான். அந்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸானது. படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்தார்கள். விளம்பர நிகழ்ச்சிகளில் கார்த்தி தன் க்யூட்டான பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். மேடையில் ஏறியதும் மைக்கை வாங்கி, அரங்கில் இருந்த பெண்களை பார்த்து உயிர் உங்களுடையது தேவி என்று கூறி இம்பிரஸ் செய்தார்.
​வந்தியத்தேவன்​உயிர் உங்களுடையது தேவி என வந்தியத்தேவன் கார்த்தி கூறியதை பார்த்து பல இளசுகள் தங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் அதே வசனத்தை கூறி பல்பு வாங்கியிருக்கிறார்கள். கார்த்திக்கு மட்டும் ஒர்க்அவுட் ஆகிறது, நமக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது என புலம்பியவர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.