தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரில்லர் படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து விமர்சனரீதியாக வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் இன்று ரிலீசாகவுள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் குறித்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அருள்நிதி நடிப்பில் கடைசியாக ‘திருவின் குரல்’ படம் வெளியாகியிருந்தது. பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படமும் அருள்நிதியின் வழக்கமான த்ரில்லர் ஜானர் பாணியில் ரிலீசானது. இந்தப்படமும் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றது. இதனிடையில் அருள்நிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஜோதிகா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘ராட்சசி’. கவுதமராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை இயக்கியுள்ளார். துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், முனிஸ்காந்த் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உயர்சாதி, ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் உயர்சாதி ஹீரோவின் உயிர் நண்பனாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இருக்கிறார். இவர்களின் நட்பு சாதி அரசியல் செய்வர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனிடையில் ஹீரோவின் நண்பர் கொலை செய்யப்பட, அந்த பழி ஹீரோ மீது விழுகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் கதை.
‘விடாமுயற்சி’ படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் ஏகே: தீயாய் பரவும் லேட்டஸ்ட் லுக்.!
இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் சிறப்பு காட்சியை பார்த்துள்ள சினிமா விமர்சகர்கள், ஹீரோவாக அருள்நிதியும், அவரின் நண்பராக சந்தோஷ் பிரதாப்பும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாக பாராட்டி வருகின்றனர். மேலும், ‘வம்சம்’ படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க கிராத்து கதைக்களத்தில் அருள்நிதி மிரட்டியுள்ளதாகவும் அவரின் மிடுக்கான தோற்றம் ஆக்ஷன் காட்சிகளுக்கு பக்காவாக பொருந்தியுள்ளதாகவும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சந்தோஷ் பிரதாப் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக, சாதி இழிநிலையில் இருந்து தனது மக்களை மீட்க போராடுபவராகவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.
Ashish Vidyarthi: 60 வயதில் ‘கில்லி’ பட நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்: வைரலாகும் போட்டோஸ்.!
சார்பட்டா, நட்சத்திரம் நகர்கிறது படங்களுக்கு பிறகு இந்தப்படம் துஷாரா விஜயனுக்கு பெயர் சொல்லுபடியாக இருக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர். சாதியை வைத்து நடக்கும் அரசியல். அதன்மூலம் ஆதாயம் அடைபவர்கள். சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அனைவற்றையும் இயக்குனர் கவுதமராஜ் படத்தில் தைரியமாக அணுகியுள்ளதாக படத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.