தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ‘சென்டிரல் விஸ்டா’ என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்ற பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி 28ஆம் தேதியான நாளை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது.
காத்திருக்கும் ஆபத்து… கொட்டப்போகும் வரலாறு காணாத மழை.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!
மேலும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை நடைபெறும் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளன. இதெல்லாம் ஒரு புறம் இருக்க புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவுக்கான பணிகள் களைக்கட்டியுள்ளன.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் திருவாடுதுறை, தருமபுர,மதுரை உள்பட 21 ஆதினங்கள் பங்கேற்கின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சோழ மன்னர்களின் செங்கோல் சபாநாயகர் இருக்கைக்கு அருகே உயர்ந்த இடத்தில் வைக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடிதான் வைக்கவுள்ளார். மேலும் இந்த விழாவில் செங்கோலை தயாரித்த உம்மிடி சகோதரர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற கட்டடத்தை கட்டிய தொழிலாளர்களும் இந்த விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் டெல்லி மாநகர எல்லைகள் சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் மல்யுத்த வீரர்கள் உள்ளிட்டோர் நாளை போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்லி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
விழாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக ஏசிபி தரவரிசை அதிகாரிகள் உட்பட 70க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவர்களில் அரசாங்கத்திற்கு எதிரான மற்றும் பிரதமருக்கு எதிரான வாசகங்களை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டதை போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும் போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பொது போக்குவரத்து வாகனங்கள், மக்கள் சேவை ஆர்வலர்கள், அதிகாரப்பூர்வ குடியிருப்பாளர்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனிமே அது கிடையாது.. தேவஸ்தானம் அதிரடி!