திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் திமுக பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களாயின் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில், செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக-வினர் முற்றுகையிட்டு, அவர்களின் கார் கண்ணாடி உடைத்தனர்.
மேலும், திமுகவினர் நடத்திய தாக்குதலில் காயமுற்ற 4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சிபிஐ விசாரணை கோரி, வழக்கறிஞர் ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுவை தள்ளுபடி செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன முக்கிய காரணம், வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் கிடையாது, பாதிக்கப்பட்ட நபர் இந்த வழக்கை தொடர்ந்து இருக்கலாம்.
மேலும், பொதுநல வழக்குக்கு உண்டான விதிமுறைகளும் இந்த மனுவில் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.