ஐபிஎல் பிளேஆப் போட்டியில் அதிரடி சதம் – சேவாக் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

அகமதாபாத்,

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இழக்குடன் களமிறங்கிய மும்பை 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றிபெற்றது.

இந்த ஆட்டத்தில் 129 ரன் எடுத்ததன் மூலம் ‘பிளேஆப் சுற்றின் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரேந்தர் சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார். 2014 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் வீரேந்தர் சேவாக் 122 ரன் எடுத்தார். தற்போது சுப்மன் கில் அவரை கடந்தார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். லோகோஷ் ராகுல் 2020-ம் ஆண்டு பெங்களூருக்கு எதிராக 132 ரன்களை குவித்தது முதல் நிலையாக இருக்கிறது. மேலும் இந்த சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் இருந்த டுபெலிசிசை அவர் முந்தினார். இந்த தொடரில் 851 ரன்களை குவித்து உள்ளார். இந்த சீசனில் 800 ரன்னை எடுத்த முதல் வீரர் சுப்மன் கில் ஆவார்.

நாளை நடைபெற உள்ள இறுதிபோட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.