கும்பகோணம் நேற்று மாலை கும்பகோணம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 1000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமாகின. அண்மைக் காலமாகக் கும்பகோணத்தில் அக்னி நட்சத்திர வெயிலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானர். நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. காவலர் குடியிருப்பில் உள்ள மரம், காசிவிஸ்வநாதர் கோயில் பிரகாரத்திலுள்ள ஷேத்திரமகாலிங்கம் அருகிலிருந்த 100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் இதனால் அடியோடு சாய்ந்தது. கும்பகோணம், மகாமக குளம் கீழ் கரையிலுள்ள அபிமுகேஸ்வரர் கோயிலின் தெற்குப் […]