திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனிமே அது கிடையாது.. தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி தேவஸ்தான பக்தர்களின் தரிசன முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.

திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்து பெற்றது. உலக பணக்கார கோவில்களில் ஒன்று. திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி சொல்ல தெரிய வேண்டியதில்லை. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காசு, பணம் , நகைகள், தலைமுடி என தாங்கள் உயர்வாக கருதுவதை திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
​ Trisha: 40 வயது பேரழகி… புடவையில் தெறிக்கவிட்ட த்ரிஷாவின் கலக்கல் போட்டோஸ்!​அதிகரிக்கும் கூட்டம்தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு மாதமாகவே பக்கர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. முன்பு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நின்ற பக்தர்களின் வரிசை தற்போது 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டுள்ளது.
​ செந்தில் பாலாஜிக்கு போன் போட்ட உதயநிதி ஸ்டாலின்… கப்சிப்பான கரூர் உடன்பிறப்புக்கள்… பரபரப்பு தகவல்!​நாள் கணக்கில் காத்திருப்புநாள்தோறும் சுமார 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறது. கடும் வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் 30 முதல் 40 மணி நேரம் வரை நாள் கணக்கில் சாமி தரிசனம் செய்ய காத்துள்ளனர் பக்தர்கள். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தான் தரிசன முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது.
​ Atlee Priya: சுத்திப்போடுங்க… கொள்ளை அழகு.. கேன்ஸ் விருது விழாவில் மனைவியுடன் அட்லீ!​சுப்ரபாத சேவைஅதன்படி இன்று முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிகாலை முதல் சுமார் 4 மணி நேரம் கூடுதலாக பக்தர்களை இலவச தரிசனத்திற்காக அனுமதிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.வெதர்மேன் சொன்ன சில்சில் தகவல்… மேகமூட்டத்தோடு பலத்த காற்று வீசுமாம்!​
பிரேக் தரிசனம் ரத்துமேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதியும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 22 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
​ திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளத்தில்… அண்ணாமலை கடும் கண்டனம்!​திருப்பாவாடை சேவைஇதேபோல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வியாழக் கிழமைகளில் திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ளவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு வியாழக் கிழமையும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக பக்தர்களை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.​ Malavika Mohanan: மாளவிகா மோகனனின் செம்ம க்ளிக்ஸ்… திணறும் இன்ஸ்டா!​
கூடுதல் தரிசனம்இதன்மூலம் வியாழக்கிழமைகளில் கூடுதலாக சுமார் 2000 பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை வழிபடலாம் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தரிசன முறையில் செய்துள்ள இந்த மாற்றம் பக்கதர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இதன்மூலம் வரிசையில் நிற்கும் நேரம் குறையும் என பக்தர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.