கரூரில் நோட்டீசை வாங்க மறுத்த துணைமேயர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராயனூர் தீரன் நகரில் உள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிற்கு நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வீட்டின் சுற்றுச் சுவரில் உள்ள இரண்டு கதவுகளில் நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதரவாளர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் வாகனத்தை தடுத்து நிறுத்தி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம், கதவில் ஒட்டப்பட்ட நோட்டீஸை உறவினர்கள் வாங்கிக் கொண்டால் சீல் வைத்ததை எடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து கதவில் ஒட்டப்பட்ட சீல் அகற்றப்பட்டது.