இலங்கை கடற்படையினர் (25 மே 2023) அதிகாலை புல்முடை, அரிசிமலை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரொதமாக மின் விளக்குகளை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, (2023 மே 25) அதிகாலை, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரன்வேலி நிருவனத்தின் கடற்படையினர் புல்முடை அரிசிமலை பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொண்டுள்ளதுடன் குறித்த கடற்பகுதியில் சட்டவிரோதமாக மின் விளக்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 33 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்ட புல்மூடை மற்றும் தொடம்கஸ்லந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட 08 நபர்களும் 02 டிங்கி படகுகள் மற்றும் அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.