வருமான வரி சோதனைகள் எதிர்க்கட்சிகள் இணைவதைத் தடுக்கத்தான் : திமுக

சென்னை வருமான வரிச் சோதனை என்பது எதிர்க்கட்சிகள் இணைவதை தடுக்கத்தான் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறி உள்ளார்.  நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றைக் கொண்டு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது.  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்குப் பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. கவுன்சிலர் தேர்தல்போல, அனைத்துப் பகுதிகளிலும் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அங்குப் பணத்தைக் குவித்தனர். ஆயினும், கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் மிகப் பெரிய வெற்றியை அளித்துள்ளனர். கர்நாடக தேர்தல் முடிவு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார். அவர் முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும் செய்தி வந்து கொண்டிருப்பதால், இதைத் திசை திருப்பும் முயற்சியாக, வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை பகுதியில் அதிமுக கணிசமான தொகுதிகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.